முதலில் வயது வந்த மகள்..! பிறகு டீன் ஏஜ் மகன்..! வீட்டிற்குள் வைத்து தொழில் அதிபர் அரங்கேற்றிய நடுநடுங்க வைக்கும் செயல்!

பெற்றெடுத்த மகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியை சேர்ந்தவர் மதுர் மலானி. இவருடைய வயது 44. இவருடைய மனைவியின் பெயர் ரூபாலி. இத்தம்பதியினருக்கு சமிக்ஷா என்ற 14 வயது மகளும், ஷ்ரேயன்ஸ் என்ற 6 வயது மகனும் உள்ளனர். இவர் ஒரு தனியார் காகித தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். நஷ்டத்தின் காரணமாக இந்த தொழிற்சாலையானது, 6 மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டது. இதனால் மலானி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அவருடைய குடும்பத்தை மலானியின் பெற்றோரே கவனித்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று ரூபாலி தன்னுடைய 2 குழந்தைகளையும் கணவரின் பொறுப்பில் விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். மாலை 6 மணியளவில் வீடு திரும்பிய போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. நெடுநேரமாக கதவை தட்டியும் யாரும் பதிலளிக்காததால், வீட்டு உரிமையாளரிடம் இருந்து சாவியை பெற்றுகொண்டு கதவை திறந்துள்ளார்.

அப்போது அவருடைய குழந்தைகள் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கணவரின் பொறுப்பில்தான் குழந்தைகளை விட்டுச்சென்றதாக ரூபாலி கூறியுள்ளார். 

அன்று மாலை நேரத்தில் அப்பகுதியை ரயில் நிலையத்திற்கு அருகே ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இறந்தவரின் அடையாளத்தை தேடியுள்ளனர். அப்போது இறந்தவர் மலானி என்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் வேலையை இழந்ததால் மலானி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் என்றும், மன அழுத்தத்தினால் இந்த தவறான முடிவு எடுத்திருக்க கூடும் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். இந்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.