ரூ.25லட்சம் இன்சூரன்ஸ் பணம்! மகளுக்கு பெற்ற தந்தையால் ஏற்பட்ட பயங்கரம்!

25 லட்ச ரூபாய்க்கு ஆசைப்பட்டு பெற்ற மகளை தந்தையொருவர் கொலை செய்திருக்கும் சம்பவமானது நேபாளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நேபாளத்தில் சிராஹா என்னும் நகராட்சி அமைந்துள்ளது. இங்கு ராம் கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் லட்சுமி என்ற மகள் உள்ளார். தன் குழந்தையின் பெயரில் இன்ஷூரன்ஸ் திட்டம் ஒன்றை ராம் கிஷோர் தொடங்கினார். முதல் தவணையாக 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை கட்டியுள்ளார்.

வங்கி பாலிசியின்படி இந்த மாதத்திற்குள் எதிர்பாராத விதத்தில் லட்சுமி இருந்தால் ராம் கிஷோரிடம் 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும். குறுகிய வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்த ராம் கிஷோருக்கு பொன்னான வாய்ப்பாக இது கிட்டியது. தன் அவசரத்தினால் லக்ஷ்மியை கொலை செய்து அப்பகுதிக்கு அருகேயுள்ள மவுலாப்பூர் சாலையோரத்தில் இந்த குட்டையில் தூக்கியெறிந்து சென்றார்.

சின்னக் குழந்தையின் சடலம் குட்டையில் இருப்பதை கண்ட பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் லட்சுமி அடையாளம் கண்டு தந்தை ராம் கிஷோரிடம் விசாரணை நடத்தினர். 

காவல்துறையினரின் விசாரணையில் தாக்குப் பிடிக்க இயலாத ராம் கிஷோர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.