நான் பார்க்கும் போது 2 பிள்ளைகளும் ரத்த வெள்ளத்துல கிடந்தாங்க..! காரணம் அவங்க அப்பா தான்..! கதறிய பெற்ற தாய்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

சொந்த பிள்ளைகள் என்றும் பாராமல் தந்தை ஒருவர் அவர்களை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் கிழக்கு லண்டன் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு நிஷாந்தினி குமார் என்ற 35 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவரின் பெயர் நிதின். நிதினின் வயது 40‌. இவர்கள் இருவரும் 2012-ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணம் செய்து கொண்டனர். 

நிதின் 1999-ஆம் ஆண்டு முதலேயே பிரிட்டன் நாட்டில் வசித்து வந்துள்ளார்‌. திருமணத்திற்கு பிறகு 2015 ஆம் ஆண்டில் நிஷாந்தினி பிரிட்டனுக்கு சென்றார். இத்தம்பதியினருக்கு 3.5 வயதில் ஒரு மகனும், 1.5 வயதில் ஒரு மகளும் இருந்தனர். சென்ற ஞாயிற்றுக்கிழமை நிஷாந்தினி குளித்துக் கொண்டிருந்த போது, படுக்கை அறையில் இருந்து குழந்தைகள் வாந்தி எடுப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக நிஷாந்தினி பதறி அடித்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது தன்னுடைய குழந்தைகள் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தன் கணவரிடம் குழந்தைகளை ஏன் கொலை செய்தீர்கள் என்று கேட்டுள்ளார். 

அதற்கு நிதின் ஏதோ மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று பதிலளித்துள்ளார். மேலும், "அவர்கள் என்னை கொலை செய்துவிட்டு நம் பிள்ளைகளையும் கொலை செய்து விடுவர். ஆதலால் அதற்குள் பிள்ளைகளை கொலை செய்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். பின்னர் தன்னுடைய மனைவியையும் கொலை செய்ய நிதின் துரத்தியுள்ளார்.

உடனடியாக கழிவறைக்கு சென்றார் நிஷாந்தினி அவசர உதவி எண்ணை அழைத்து தன்னுடைய குழந்தைகள் கணவரால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது, நிதினும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

உடனடியாக 3 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தைகள் இறந்த நிலையில், நிதின் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.