மருமகள் மீது மாமனாரின் காமப் பார்வை! கண்டுபிடித்த மாமியார்! பிறகு அரங்கேறிய கொடூரம்!

மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கணவனை கூலிப்படையை ஏவி மனைவி கொலை செய்திருக்கும் சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் முனியாண்டி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் பாண்டியம்மாள். வியாழக்கிழமை அன்று இரவு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் முனியாண்டியை கொலை செய்ததாக பாண்டியம்மாள் பரமக்குடி காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தார். காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. 

அதாவது, இத்தம்பதியினருக்கு பாண்டி என்னும் மகன் உள்ளார். பாண்டி சில ஆண்டுகள் முன்னர், ரயில் விபத்தில் தன் கால்களை இழந்துள்ளார். இவருக்கு பத்து ஆண்டுகள் முன்னர் மலர் என்னும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 10 ஆண்டுகளாகியும் இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் இருவரும் வருத்தத்தில் இருந்தனர்.

இந்த சூழ்நிலையை தனக்கென முணியாண்டி பயன்படுத்தி கொள்ள நினைத்தார். தன் மருமகளிடம் பல்வேறு பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார். இதனை அறிந்துகொண்ட பாண்டியம்மாள் முனியாண்டியை வன்மையாக கண்டித்துள்ளார். ஆனாலும் முனியாண்டி காதில் வாங்காமல் மருமகளிடம் பாலியல் சீண்டல்களை மேற்கொண்டு வந்தார். 2 முறை மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முனியாண்டி முயன்றுள்ளார்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் 3 பேர் கொண்ட கூலிப்படையை அழைத்து தன் கணவரை கொலை செய்யுமாறு கூறியுள்ளார். கூலிப்படையினர் முனியாண்டியை கொன்றனர் என்று வாக்குமூலம் அளித்தார்.

இந்த சம்பவமானது பரமக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூலிப்படையை சேர்ந்த 3 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.