கணவன் இல்லாத போது மாமனார்..! இளம் மனைவிக்கு விபரீத அனுபவம்! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

காம இச்சைக்கு இணங்க மறுத்த மருமகளை மாமனார் கொலை செய்த சம்பவமானது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா எனும் மாவட்டம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட ராகி முத்தஹல்லி கிராமத்தில் நாகராஜூ என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் தொழில் புரிந்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் அனில். அணில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இதனிடையே அனிலுக்கு கடந்த சில மாதங்கள் முன்னர், வீணா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அனில், மனைவி மற்றும் தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில வாரங்களாகவே நாகராஜு, மருமகள் வீணாவிடம் தவறான முறையில் நடந்து கொண்டு வந்துள்ளார். அதாவது, வீட்டில் அனில் இல்லாத நேரத்தில் மருமகளின் முன் அரைகுறை ஆடையில் நிற்பது போன்ற அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பணி நிமித்தமாக சில நாட்களுக்கு முன்னர் அனில் வெளியூருக்கு சென்றுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்த நாகராஜு இரவு நேரங்களில் வீணாவிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு நாகராஜு வீணாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். வீணா பயந்துகொண்டு கூச்சலிடவே, நாகராஜு அவரை பலமாக தாக்கியுள்ளார். பின்னர் மருமகள் என்றும் பாராமல் கத்தியால் குத்தி வீணாவை கொலை செய்துள்ளார். 

சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வீணாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நாகராஜுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.