கணவனால் அந்த சந்தோசத்தை தர முடியவில்லை! தகாத முடிவெடுத்த மனைவி! கண்டுபிடித்த தந்தை செய்த செயல்!

ராஜஸ்தானில் திருமணம் செய்து வைத்த மருமகனை விட்டு விட்டு வேறு ஒரு ஆணுடன் ஓடிச் சென்ற தனது மகளால் ஆத்திரமடைந்த அவரது தந்தை, இரட்டைக் கொலைகள் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன்ஜுனு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஜாட் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு சுமன் என்ற மகள் உள்ளார். இன்னிலையில் சுமனின் பெற்றோர் அவருக்கு வரன் தேடி இருந்தனர். அப்போது நரேந்திரன் ஜாட் என்பவருக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து வைத்து இருக்கிறார். திருமணம் நடைபெற்ற நாள் முதலிலிருந்தே சுமனும் அவரது கணவரும் நெருக்கமாக இல்லை என்று கூறப்படுகிறது.

உடலளவிலும் அவர்களுக்குள் எந்த உறவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா என்ற இளைஞர் சுமனின் வீட்டுக்கு அருகில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுமன் மற்றும் கிருஷ்ணா விற்கும் இடையே பழக்கம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த தகவலை அறிந்த சுமனின் கணவர் மனமுடைந்து போனார். மேலும் இந்த கள்ளக்காதல் குறித்த தகவல் சுமனின் தந்தை ஜாட்டிருக்கும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து ஜாட் தனது மகளை பார்ப்பதற்காக வந்திருக்கிறார் . அப்போது அவரது மகள் சுமனும் கிருஷ்ணாவும் ஓடி விட்டதாக கூறியுள்ளனர். இதனை அறிந்தவர் மிகவும் ஆத்திரம் அடைந்தார். திருமணம் செய்து வைத்த கணவரை ஏமாற்றிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த தனது மகளை எண்ணி கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார் ஜாட். உடனே அந்த இளைஞர் கிருஷ்ணாவின் குடும்பத்தினருக்கு போன் செய்து உடனடியாக என்னுடைய மகள் வீடு வந்து சேர வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார். இல்லையெனில் உங்கள் அனைவரையும் காலி செய்து விடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் சுமன் வீடு வந்து சேராததால் கோபமடைந்த அவரது தந்தை ஹரியானா மாநிலத்தில் உள்ள மகேந்திரன் நகர் என்ற ஊருக்கு சென்றுவிடுகிறார். அங்கு சென்று கிருஷ்ணாவை தேடி இருக்கிறார் ஜாட். அந்த இடத்தில் இருந்த கிருஷ்ணாவின் சகோதரர் தீபக் (வயது 20) மற்றும் அவரது நண்பர் நரேஷ்(வயது 19) ஆகிய ஆத்திரத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறார் ஜாட். இதுகுறித்து அருகிலிருந்த போலீசாருக்கு தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இதனையடுத்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஜாட்டை கைது செய்து அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.