அம்மா இல்லை! வீட்டில் எங்க அப்பா என்னை என்ன செய்றார்னு பாருங்க! 14 வயது மகள் வெளியிட்ட பகீர் வீடியோ!

பல வருடங்களாக தன்னை கொடுமைபடுத்திய தந்தையை வீடியோ ஆதாரத்தின் மூலம் மகள் புகாரளித்திருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டிலுள்ள ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் டேமன் பெக்னெல். இவருடைய வயது 47. இவர் சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருடைய மகளை வளர்க்கும் பொறுப்பை நீதிமன்றம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் தன்னுடைய மகளை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் பலமுறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே அந்தப்பெண் ஒரு வீடியோவை காவல்நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். அந்த வீடியோவில் டேமன் தன் மகளை கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும்  வளர்ப்பு நாய்களை பெரிய அளவிற்கு துன்புறுத்தியுள்ளார். அதோடு நிற்காமல் தன்னுடைய மகளை மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி கொடுமைப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த காவல்துறையினர் உடனடியாக டேமனை கைது செய்தனர். குழந்தையை கொடுமைப்படுத்தியதற்காகவும், நாய்களை கொடுமைப்படுத்தியதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது ஃப்ளோரிடா மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.