கொரோனா தடுப்பூசி என கூறி பெற்ற மகள்கள் 3 பேரின் பெண் உறுப்பை சிதைத்த தந்தை..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

எகிப்தில் கொரோனா தடுப்பூசி என்று கூறி மூன்று மகள்களின் பெண்ணுறுப்பை தந்தை சிதைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


எகிப்து நாட்டை பொறுத்தவரை பெண்ணுறுப்பு சிதைப்பு என்பது ஒரு சடங்காக பின்பற்றப்பட்டது. மேலும் பெண் உறுப்பு சிதைப்பு என்பது குற்றம் எனக் கூறி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அது தடை செய்யப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது. பெண்ணுறுப்பினை சிதைப்பதால் பலவித பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. பெண் உறுப்பை சிதைப்பதால் கர்ப்பப்பையில் தொற்று, சிறுநீரகத்தில் தொற்று ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

அதுமட்டுமில்லாமல் கருத்தரித்தலில் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும். மேலும் பெண்கள் உடலுறவு கொள்ளும் பொழுது அது அவர்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதனை கருத்தில் கொண்டுதான் அந்நாட்டில் பெண்ணுறுப்பு சிதைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தடையை மீறியும் தற்போது ஒருவர் தன்னுடைய சொந்த மூன்று மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பை செய்திருக்கிறார். அதாவது கொரோனாவுக்கு தடுப்பூசி போடுவதாக கூறி மருத்துவர் ஒருவரின் உதவியோடு தன்னுடைய மூன்று மகள்களுக்கும் மயக்க ஊசி போட்டு இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அதே மருத்துவரின் உதவியை கொண்டு தன்னுடைய மகள்களுக்கு பெண் உறுப்பு சிதைப்பு சடங்கை செய்து இருக்கிறார். இதுகுறித்து அந்த ஆணின் மனைவிக்கு தெரிய வரவே அவர் உடனடியாக போலீசில் புகார் அளித்திருக்கிறார். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.