கெஞ்சி கெஞ்சி பரிதவித்தும் கண்டு கொள்ளாத அதிகாரிகள்! இந்தியன் வங்கி முன்பு விஷம் குடித்து உயிர் நீத்த விவசாயி!

வங்கிக்கடன் அளவுக்கு அதிகமாக உயர்ந்ததால் அதிர்ந்த விவசாயி வங்கியின் முன்னே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டம் சங்ககிரி கொங்கணாபுரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் ஒரு விவசாயி. 2005-ஆம் ஆண்டில் இவர் சொந்தமாக பால்பண்ணை தொடங்க முடிவு எடுத்துள்ளார். சமாளிக்க இயலாது என்பதற்காக 3 நண்பர்களுடன் இணைந்து வீட்டுப்பத்திரத்தை அடமானம் வைத்து அங்குள்ள இந்தியன் வங்கியில் 9 கோடி ரூபாய் கடன் பெற்றார்.

ஆனால் துரதிஷ்டவசமாக எதிர்பார்த்த அளவிற்கு பால்பண்ணை வியாபாரம் அமோகமாக அமையவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தும் தொடர்ந்து நஷ்டமே ஏற்பட்டு வந்ததால் தன்னுடைய பங்கிற்கான கடனை மட்டும் அடைத்துவிடலாம் என்று பூபதி முடிவெடுத்தார்.

அதற்காக இன்று காலை இந்தியன் வங்கிக்கு சென்றார். அங்கு தன் பங்கின் கடனை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் 3 பேரின் கடனையும் சேர்த்து பூபதியே கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். இதைக்கேட்டு பூபதி பேரதிர்ச்சி அடைந்தார். ஆத்திரமடைந்த பூபதி வங்கி ஊழியர்களகடம் ஆவேசமாக முறையிட்டார். ஆனாலும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த பூபதி செய்வதறியாது திகைத்தார்.

பூபதி எதிர்பாராவிதமாக வங்கியின் வாசலிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் அறிந்த காவல்துறையினர் இந்தியன் வங்கிக்கு விரைந்து வந்துள்ளனர். பூபதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவமானது சங்ககிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.