மகள் காதல் திருமணம் செய்து கொண்டால் தனக்கு அவமானம் ஏற்பட்டுவிடும் என்று எண்ணிய தந்தை தற்கொலை செய்துகொண்டு சம்பவமானது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞருடன் காதல் திருமணம் செய்த மகள்..! வந்துடுமானு கெஞ்சியும் பலன் இல்லை! பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த தந்தை!

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி என்ற இடத்திற்கு அருகே வள்ளிமலை கோட்டை நத்தம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி ஆவார். இவருடைய மகளின் பெயர் திவிதா. திவிதாவின் வயது 19. இவருக்கு மேல்பாடி காலனியை சேர்ந்த இமானுவேல் என்பவருடைய மகனான ஷியாம் (20) என்பவர் மீது காதல் வந்துள்ளது.
ஆனால் ஷியாம் மாற்றுசமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ரவியின் குடும்பத்தினர் இந்த காதலை எதிர்த்து வந்தனர். இந்நிலையில் 2-ஆம் தேதியன்று திவிதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பெங்களூருவுக்கு சென்று ஷியாமை திருமணம் செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் காதல் ஜோடி வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு வேண்டி தஞ்சம் புகுந்தது. இந்நிலையில் கலெக்டர் ரவியின் குடும்பத்தினரை கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்தார். மணக்கோலத்தில் நின்று கொண்டிருந்த தன்னுடைய பெண்ணை பார்த்தவுடன் ரவி அதிர்ச்சி அடைந்தார். "என்கூட வந்திடுமா" என்று கதறி அழுது தன் மகளிடம் ரவி முறையிட்டுள்ளார். ஆனால் திவிதா காதல் மோகத்தால் ரவி கூறியதை நிராகரித்தார்.
இதனிடையே ரவி வேறுவழியின்றி கலெக்டர் அலுவலகத்தை விட்டு மனமுடைந்து போனார். அவமானம் தாங்காமல் துடித்துக்கொண்டிருந்த ரவி நேற்றிரவு வயலுக்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர் ரவியை மீட்டெடுப்பதற்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ரவியின் உடல் எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது வள்ளி மலைப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.