மகள் பயிலும் கல்லூரியிலேயே தந்தை அவருக்கு ஜூனியராக இருக்கும் அதிசய சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
ஒரே கல்லூரியில் மகள் சீனியர், அப்பா ஜூனியர்! அதிசயம் ஆனால் உண்மை
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரபல சட்டக்கல்லூரியில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். இவருடைய தந்தை ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் ஆவார். மாணவிக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சகோதரன் சட்டப்படிப்பு பயின்று வருகிறார். சகோதரி அப்பகுதியில் மருத்துவராக பயின்று வருகிறார்.
மாணவியை சமூக வலைத்தளத்தில் தன் தந்தையை பற்றி அதிசய பதிவொன்று செய்திருந்தார்.
அதாவது, "என் தந்தைக்கு வழக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவருக்கு நீதிமன்றத்தில் வாதாடுவது கனவாகும். ஆனால் அவருடைய குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவரால் சட்டம் பயில இயலவில்லை. அவர் ஒரு கான்ஸ்டபிளாக உருவானார். இருப்பினும் என்னுடைய சட்ட வகுப்பறைகளில் தினந்தோறும் மிகவும் ஆர்வமான கருத்துக்களை கேட்டு அறிந்துகொள்வார். அதனுடன் அவருக்கு நீதித்துறையின் மீதுள்ள ஆர்வத்தை நான் அறிந்து கொண்டேன். தற்போது என் தந்தையின் கனவை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டது. என் தந்தை என்னுடைய கல்லூரியிலேயே சட்டம் பயின்று வருகிறார். வகுப்பில் அவர் காட்டும் ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது. நான் கல்லூரியில் அவருடைய சீனியராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்" என்று பதிவு செய்திருந்தார்.
மகள் கல்லூரியில் தந்தைக்கு சீனியராக இருக்கும் சம்பவத்தை பொதுமக்கள் வினோதமாக கருதுகின்றனர்.