1200 கி.மீ..! 7 நாட்கள் பயணம்..! 2 நாள் முழுப்பட்டினி..! காயம் அடைந் தந்தையை சைக்கிளில் அமர வைத்து அழைத்து வந்த 15 வயது ஜோதி! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

15 வயதான ஜோதி என்ற சிறுமி தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால், சுமார் 1200 கிலோமீட்டர் தூரத்தை கடந்த ஏழு நாட்களாக சைக்கிளில் தன் தந்தையை வைத்து இயக்கி தனது சொந்த ஊருக்கு சென்று இருக்கிறார்.


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் புலம்பெயர் தொழிலாளர்கள் , கூலி வேலை பார்ப்பவர்கள் என பலரும் அன்றாட உணவிற்கு பெரும் துயருற்று வருகின்றனர். இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் உணவின்றி தவித்து வரும் நிலையில் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று முடிவெடுத்து பசி பட்டினியுடன் நடந்தே சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் பொழுது பல விபத்துகளை சிக்கி அவர்கள் உயிரிழப்பதை தொடர்ந்து நாம் செய்திகளாக பார்த்து வருகிறோம்.

அப்படியாக சிறுமி ஒருவர் தன்னுடைய தந்தையை சைக்கிளில் அமரவைத்து மிதித்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். இந்த 15 வயது சிறுமியின் பெயர் ஜோதி. இவர் தன் தந்தையுடன் டெல்லிக்கு அருகில் உள்ள குர்கான் என்ற இடத்தில் வசித்து வந்துள்ளார். நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் இவர்கள் அன்றாட உணவிற்கு அதிகமாக கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதனையடுத்து பீகாருக்கு அருகில் உள்ள தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று தந்தையும் மகளும் முடிவு செய்துள்ளனர். ஜோதி தனது தந்தையுடன் மிதிவண்டியில் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எந்த வேலையும் இல்லை, பணமும் இல்லை, வீட்டின் உரிமையாளர் அவர்களை வெளியே எறிவேன் என்று மிரட்டியதால், தந்தை-மகள் இருவரும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். துரதிஷ்டவசமாக ஜோதியின் தந்தைக்கு காலில் ஏற்பட்ட காயத்தால் மிதி வண்டி ஓட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த ஏழு நாட்களாக 1200 கிலோ மீட்டர் தூரம் அந்த சிறுமி தன் தந்தையை வைத்து சைக்கிளை மிதித்து சென்றிருக்கிறார். இதில் அவர்கள் சென்ற ஏழு நாட்களில் இரண்டு நாட்களில் ஒருவேளை உணவு கூட இன்றி அவர்கள் பசியோடு சென்றுள்ளனர். இறுதியில் வெற்றிகரமாக 7 நாட்களின் பயணத்திற்குப் பின்பு அவர்கள் பீகாரில் உள்ள தங்களது கிராமத்திற்கு அருகில் சென்று உள்ளனர். அங்கு அவர்கள் நடந்ததைப் பற்றி கூறி உதவி கேட்டுள்ளனர். அவர்களுக்கு உண்ண உணவும் தேவையான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளது.