சவூதி To கனடா! தந்தையிடம் இருந்து தப்பிக்க 1000 கிமீ பறந்து வந்த சகோதரிகள்! பதற வைக்கும் காரணம்!

பெற்ற தந்தையின் தொல்லைகளை தாங்க இயலாத 2 மகள்கள் சவுதி அரேபியாவிலிருந்து தப்பித்து துருக்கி நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ள சம்பவமானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சவுதி அரேபியா நாட்டை சேர்ந்தவர் துவா. இவருடைய வயது 22. இவருடைய சகோதரியின் பெயர் தலால் அல் ஷோவாக்கி. இவரின் வயது 20. இவர்கள் தற்போது துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

காரணம் கேட்டபோது, இவர்களுடைய தந்தை எந்நேரமும் இவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரியவந்துள்ளது. எவ்வளவு முறை தடுத்தும் அவர் மகள்களை அடித்து துன்புறுத்தியுள்ளதாக கூறுகின்றனர். இதனிடையே பணத்திற்காக அவர்களை ஒரு முதியவருக்கு திருமணம் செய்து வைக்கவும் தந்தை துணிந்துவிட்டதாக கூறினர்.

தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை பற்றி துவா கூறுகையில், "குடும்பத்தினர் அனைவரும் ஜூன் மாதம் துருக்கிக்கு விடுமுறைக்கு வந்த போது நாங்கள் இருவரும் அவர்களிடம் இருந்து தப்பித்து விட்டோம். எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை கணவுள்ளதை எங்கள் தந்தை ஏற்க மறுக்கிறார்.

மேலும் எங்களை சவுதி அரேபியா நாட்டில் சிறைக்கைதி போன்று கொடுமை செய்து வந்தார். எங்கள் வீட்டு கழிவறைகளை உபயோகிக்கும் போது கதவை சாத்தப் கூடாது என்றும் ஈவிரக்கமின்றி கட்டளையிட்டிருந்தார்.

எங்கள்தந்தையிடம் இருந்து தப்பித்து ஓடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. நாங்கள் இங்கு தஞ்சம் புகுந்த ஆளும் அவர் எங்களை நிச்சயம் தேடி கொண்டிருப்பார். அவரால் என்றுமே எங்கள் உயிருக்கு ஆபத்து. எங்களுக்கு கனடா நாட்டில் அடைக்கலம்ம் வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறினார். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.