உயர்கிறது ரயில் கட்டணம்..! பயணிகளுக்கு காத்திருக்கும் புத்தாண்டு ஷாக்..!

சரக்கு மற்றும் பயணிகள் இரயில்வே கட்டணம் உயரும் என்று ரயில்வே வாரிய தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியன் ரயில்வேயில் இந்த ஆண்டின் 2-வது காலாண்டில் முந்தைய காலத்தை காட்டிலும் வருவாய் பெரிதளவில் குறைந்துள்ளது. பயணிகள் கட்டணம் 155 கோடி ரூபாயும், சரக்கு கட்டணம் 3,901 கோடி ரூபாயும் குறைந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரயில்வே நிர்வாகத்தில் 8 பிரிவுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு "இந்தியன் ரயில்வே மேலாண்மை நிறுவனம்" என்று சீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி ரயில்வே கட்டணங்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரயில்வே வாரிய தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி "ரயில்வே கட்டணங்களை உயர்த்துவது பற்றி ஆலோசனை செய்து வருகிறோம். ஏற்கனவே சரக்கு கட்டணங்கள் மிகவும் அதிகமான கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. தரைவழி செல்லும் சரக்கு பெட்டிகளை, ரயில் வழி மாற்றுவதே எங்களின் நோக்கமாக அமைந்துள்ளது.

முன்னதாக ரயில்வேக்கு தேர்வானது ரயில்வே வாரியம் நடத்தி வந்தது. ஆனால் இனிமேல் ரயில்வேக்கு யு.பி.எஸ்.சி மூலமே தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வுகளும் 5 பிரிவுகளாக நடத்தப்படும் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், தொழில்நுட்பம் ஆகிய நான்கு பிரிவுகளும், தொழில்நுட்பம் இல்லாத மற்றொரு பிரிவும் தேர்வாக வைக்கப்படும். 

விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு எழுதி முடித்த பிறகு ஐ.ஆர்.எம்.எஸ் அல்லது பிற சேவைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். 35 வருடங்கள் அனுபவம் மிக்க ரயில்வே துறை அதிகாரிகளே இனி ரயில்வே வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த இணைப்பானது நடைபெறும் வரை அதிகாரிகள் தங்களுடைய பணிகளை தொடரலாம் ஒரு அதிகாரி கூட எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இணைப்பு தொடரும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியானது எதிர்மறை கருத்துக்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.