புடவையுடன் முரட்டு ஆண்ட்டிகள் இருவர் போடும் குத்தாட்டம் செம வைரல்!

2017-ம் ஆண்டில் ஓனம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநிலத்தில் "வெளிப்படன்டே புஷ்டக்கம்" (velipadinte pushtakam) என்ற படத்தில் வெளியான " ஜிமிக்கி கமல்" என்ற பாடல் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


இந்த வீடியோவை உலகில் உள்ள பல இடங்களில் ரீமேக் செய்து வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த வருடமும் இதைப்போன்ற மற்றொரு வீடியோவும் வைரலாகி உள்ளது. இரண்டு பெண்கள் புடவையில் " Aap Jaisa Koi Meri Zindagi" என்ற பாட்டிற்கு நடனமாடியுள்ளனர். இந்தப்பாட்டு குர்பான் என்னும் திரைப்படத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை அப்லோடு செய்த சில நிமிடங்களிலேயே நிறைய பேர் ஷேர் செய்துள்ளனர். மக்களால் அவர்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை. ட்விட்டரில் அதிக மக்கள் "like" செய்துள்ளனர். அதில் ஒருவர் நஸ்ரிம் அஷ்ரப் என்ற புகழ்பெற்ற நாவலாசிரியரை "tag" செய்துள்ளனர்.  அவருக்கு புடவை மீது அளவில்லாத மோகமுள்ளது குறிப்பிடத்தக்கது.

புடவைக்கு உள்ள மௌசு குறையாமல் தான் உள்ளது.