என்ன சிம்ரன் இதெல்லாம்? வைரலாகும் வீடியோ உள்ளே!

பிரபல கோலிவுட் நடிகை சிம்ரன் குறித்து வெளியாகியுள்ள வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


90-களில் தொடங்கி கோலிவுட் திரையுலகில் மிகவும் முக்கியமான கதாநாயகிகளில் ஒருவராக நடிகை சிம்ரன் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் திரையுலகில் 1997-ஆம் ஆண்டு வெளியான "வி.ஐ.பி" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் "நேருக்கு நேர்" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அறிமுகமானார்.

முன்னணி கதாநாயகர்களான கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களின் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலரது கனவு கன்னியாக நடிகை சிம்ரன் வலம்வந்தார். என்னுடைய மெல்லிசான இடை ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்திழுத்தது என்று கூறினால் அது மிகையாகாது.

திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து சற்று ஒதுங்கியிருந்தார். இதன் நடுவே சென்ற ஆண்டு முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக "பேட்ட" திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களில் இவர் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அதாவது தன்னுடைய மகனுடன் சேர்ந்து உருவாக்கிய டிக்டாக் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோவானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது தான் மட்டும் இருக்கும் ஒரு டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் வாயடைத்து போயுள்ளனர். 43 வயதான சிம்ரன் இவ்வளவு அழகாக இருக்க கூடுமோ என்று அவர்கள் திகைப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.