செல்ஃபி எடுக்க நெருக்கமாக சென்ற நடிகை! ரசிகர் செய்த தகாத செயல்!

நாட்டின் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பேற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசி வருகின்றனர். மோடிக்கு எதிராக பேசும் வல்லமை மிக்க நடிகையாக இந்தி பட நடிகை ஸ்வரா பாஸ்கர் திகழ்கிறார்.


இவருக்கு வயது 31. இவர் நடித்த பல சினிமாக்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக தன்னு வெட்ஸ் மனு ( Tanu Weds Manu), ராஞ்சாஹ்னா (Ranjhaana) ஆகியவை மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற்றன.

இவர் இந்த மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி என்பவருக்கும் , காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் திக்விஜய் சிங், மற்றும் பிகார் மாநிலத்தில் கன்னையா குமார் ஆகியோருக்கு ஆதரவளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

இந்நிலையில், இவரிடம் செல்பி எடுக்க ஒரு நபர் ஏர்போர்ட்டில் அனுமதி கேட்டார். பின்னர் ஒரு வீடியோ எடுத்து " அதில் அடுத்த முறையும் நரேந்திர மோடி தான் பிரதமர்"  என்று கிண்டலடித்துள்ளார்.இதற்கு பதிலளித்துள்ள ஸ்வேதா, தான் அனைவருடனும் செல்பி எடுத்துக்கொள்பவர் என்றும், செல்பி விஷயத்தில் அரசியல் பாகுபாடின்றி செயல்படுவேன் என்றும் கூறினார்.

பின்னர் அந்த நபர் மிகவும் குறுக்குத் தனமாக யோசித்திருப்பதாகவும். இது போன்ற யோசனையெல்லாம்  "பக்தாஸ்"- க்கு மட்டும் தான் வரும் என்றும் சாடியுள்ளார்.