அன்னைக்கு என் தலைவன் படம் ரிலீஸ்..! கல்யாணத்தையே தள்ளி வைத்த வெறித்தனம் ரசிகன்! யாருக்கு தெரியுமா?

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுள் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி.


நடிகர் மம்முட்டிகாக மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்தவகையில் நடிகர் மம்முட்டியின் திரைப்படம் வெளியீட்டிற்காக தனது திருமண தேதியை மாற்றி அமைத்து ரசிகர் ஒருவர் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

மேமன் சுரேஷ் என்பவர் நடிகர் மம்முட்டியின் தீவிர ரசிகர் ஆவார். நடிகர் மம்முட்டியின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது தான் இவருடைய தலையாய கடமையாம். 

மேமன் சுரேஷுக்கு வரும் நவம்பர் 21ஆம் தேதி திருமணம் திருமணம் செய்ய அவரது வீட்டாரால் தேதி குறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மம்முட்டி நடிப்பில் மாமாங்கம் என்ற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. மேமன் சுரேஷுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட அதே தேதியில் நடிகர் மம்முட்டியின் மாமாங்கம் திரைப்படமும் வெளியாக உள்ளது.

தன்னுடைய திருமண நாளிலேயே தனக்கு பிடித்த நடிகரின் திரைப்படமும் வெளியாக உள்ளது என்பதால் திருமணத்தை மேமன் சுரேஷ் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதிக்கு மாற்றி வைத்திருக்கிறார். இதன்படி மேமன் சுரேஷ் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி அவருக்கு நிச்சயம் செய்த பெண்ணுடன் நல்ல முறையில் திருமணம் நடைபெற்றது.


இதன் மூலம் திருமணமான புது மனைவியுடன் தனக்கு பிடித்த நடிகர் மம்முட்டியின் திரைப் படத்தை முதல் நாளே பார்க்க இயலும் என மிகவும் சந்தோஷமாக கூறியிருக்கிறார்.