குடித்துவிட்டு நடுரோட்டில் கெட்ட ஆட்டம்! வைரலாகும் நாகர்கோவில் பெண்மணி!

"மதுப்பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்". இந்த வாசகத்தை எவ்வளவு முறை கேட்டாலும் நம் நாட்டின் குடிமகன்கள் திருந்துவதில்லை என்று நம் நாட்டு பெண்கள் குறையாக கூறுவர்.


ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஆண்களுக்கு இணையாக பெண்கள் மது அருந்தி ஆட்டம் போடுகின்றனர். நாகர்கோவிலில் ஒரு பெண் குடித்து விட்டு ரகளை செய்தது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதும் இடம் கோட்டார் சந்திப்பு. எப்பொழுதும் சாலை நெரிசல் மிகுதியாக ஏற்படும் பகுதியாக கருதப்படுகிறது. இந்த சாலையில் ஒரு பெண் குடித்து விட்டு வாகன போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறாக விளங்கினார். 

உடனேமக்கள் 108- ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினரை அழைத்தனர். ஆனால் அவர்களாலும் அந்தப்பெண்னை கட்டுப்படுத்த இயலவில்லை.இறுதியில் அந்த பெண் தானே கலைப்படைந்து அந்த இடத்தில் இருந்து விலகிச்சென்றார்..