நாட்டுக்கோழி முட்டை..! ஏர் கலப்பை..! மனைவியுடன் வேறு மாதிரி வாழும் வடசென்னை கிஷோர்..! எங்கு தெரியுமா?

தென்னிந்திய திரையுலகில் பிரபல வில்லன் நடிகர் ஒருவர் இயற்கை விவசாயத்தை கடந்த 15 ஆண்டுகளாக செய்து வரும் செய்தியானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


கோலிவுட் திரையுலகில் பொல்லாதவன், கபாலி, ஆடுகளம், வட ஆகிய திரைப்படங்களில் மிகவும் வில்லனாக தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் நடிகர் கிஷோர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மனைவியின் பெயர் விஷாலா. இவர்கள் பெங்களூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரியப்பனதொட்டி என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் 8 ஏக்கர் மதிப்புள்ள "பஃப்ஃபலோ பேக்" என்ற நிலத்தில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரும் இணைந்து கடந்த 15 வருடங்களாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு நடிகர் கிஷோர் பலர் ஷுட்டிங் இல்லாத காலங்களில், மனைவிக்கு இந்த இயற்கை விவசாயத்தில் உதவுவார் என்று கூறப்படுகிறது. மற்ற நேரத்தில் மனைவி விஷாலா நிர்வாணமாக இயற்கை விவசாயத்தை செய்து வருகிறார்.

தங்களுக்கு தேவையான அனைத்து உணவு பொருட்களையும் இவர்களை அறுவடை செய்கின்றனர். அதுமட்டுமின்றி சினிமா பிரபலம் என்பதற்காக ஆடம்பரமாக இல்லாமல் தங்களுடைய பிள்ளைகளுக்கு இயற்கையுடன் இணைந்து வாழும் எளிமையான வாழ்க்கை முறையை கற்றுக்கொடுத்து வருகின்றனர்.

நடிகர் கிஷோர் மற்றும் மனைவி விஷாலா ஒரே கல்லூரியில் படித்தவர்களாவர். கல்லூரியில் படித்தபோதே ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் தங்களுக்கு பிடித்தமான வாழ்க்கையை மேற்கொள்ள முடிவெடுத்தனர். அதற்காக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் விவசாயத்தை வருவாய்க்காக செய்ய பிடிக்காததால், கிஷோர் சினிமா துறையில் ஈடுபட்டார்.

ஊரடங்கு காலத்தில் தினசரி கணிசமான நேரத்தை குடும்பத்தினர் அனைவரும் விவசாயத்தில் செலவழித்து வருகின்றனர். கிராமத்தில் வீடுகளுக்கிடையே கணிசமான இடைவெளி இருப்பதால் கொரோனா தொற்றுக்கு அச்சப்பட வேண்டியதில்லை. 1.5 வருடங்களாக வெறும் இருமுறை மட்டுமே சாப்பிட்டு வருகின்றனர். கஞ்சி, களி, இட்லி, தோசை, நாட்டுக்கோழி முட்டை காட்டு சாப்பிட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கும் இதே போன்ற இயற்கை உணவுகளை அளித்து வளர்த்து வருகின்றனர்.

இவர்களுடைய வாழ்க்கை முறையை கடைபிடித்தால் அனைவரும் இயற்கையுடன் இணைந்து வாழ்வதற்கு நிச்சயமாக முயற்சிப்போம் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.