எந்த சேலை, எந்த சட்டை எடுத்தாலும் ரூ.10! ஜவுளிக்கடை முன்பு திரண்ட இளைஞர்கள், யுவதிகள்! எங்கு தெரியுமா?

ஆடி மாதம் தொடங்கியதையொட்டி பிரபல ஜவுளிக்கடை சேலையும், சட்டையும் வெறும் 10 ரூபாய்க்கு விற்கப்படும் என்ற அறிவிப்பினால் அரண்மனை வாசலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரண்மணைவாசல் என்னும் பகுதி  சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் பூம்புகார் என்னும் பிரபல ஜவுளிக்கடை அமைந்துள்ளது. ஆடி மாதத்தினால் விற்பனையை அதிகப்படுத்த பல ஜவுளிக்கடைகள் பல்வேறு முயற்சியினை கையாளுகின்றனர். அதேபோன்று பூம்புகார் கடையானது வியப்பான முறையில் ஒரு சலுகையை அறிவித்துள்ளது.

தினமும் கடைக்கு வரும் முதல் 100 பேருக்கு அவர்கள் எடுக்கும் சட்டையும் சேலையும் வெறும் 10 ரூபாய் மட்டுமே என்று அறிவித்திருந்தது. இதனை முந்தைய நாளே அறிந்த அப்பகுதி மக்கள் மறுநாள் காலையில் கடையின் வாயிலில் அலைமோதினர். கடை திறக்கப்பட்ட போது அனைவரும் உள்ளே செல்ல முயற்சித்தனர். இதனால் அப்பகுதியில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அப்பகுதி காவல் துறையினர் விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

இந்த சம்பவமானது அரண்மனைவாசலில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.