இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் சகோதரி முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீனின் மகனை கரம் பிடித்திருப்பது ஹைதராபாதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரரின் மகனை இரண்டாவது கணவன் ஆக்கிய சானியா மிர்சாவின் சகோதரி! யார் தெரியுமா?

இந்தியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் சகோதரியின் பெயர் அனம் மிர்சா. இவருக்கு 2016-ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரை சேர்ந்த அக்பர் ரஷீத் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன்பிறகு அனம் மிர்சாவுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அசாருதீனின் மகனான அசாதுதீனுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதலுக்கு இருவீட்டின் பெரியவர்களும் சம்மதம் தெரிவித்தனர். ஹைதராபாத் நகரில் சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்தின் புகைப்படங்களை அனம் மிர்சா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். நெட்டிசன்கள் பலர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் சமூகவலைத்தளங்களில் கமெண்ட்டுகளை பதிவு செய்திருந்தனர்.