பிள்ளைகளுக்கு பால் வாங்க கூட காசு இல்லை..! தல உதவணும்! கண்ணீருடன் கதறிய பில்லா நடிகர்!

ஊரடங்கால் அன்றாட வாழ்வை இணைந்து வாழும் பிரபல நடிகர் ஒருவருக்கு நடிகர் அஜித் உதவ முன்வர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,84,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 26,35,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

தமிழகத்தில் இன்றுவரை 1629 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 635 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் தற்போது மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் அன்றாடம் வேலை பார்த்து வந்த சின்னஞ்சிறு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் தினசரி வாழ்வை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

போதிய பணம் இல்லாததால் அவர்களால் அன்றாட வாழ்க்கையை நடத்த இயலவில்லை. இந்நிலையில் நடிகர்கள் பலர் இத்தகைய கலைஞர்களுக்கு உதவி வருகின்றனர். ரேணிகுண்டா, பில்லா-2 ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் தீப்பெட்டி கணேசன் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை கேள்விப்பட்டவுடன் நடிகர் விஷால், ஸ்ரீமன், பிரேம்குமார் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் தீப்பெட்டி கணேசனுக்கு உதவி வருகின்றனர்.

அவ்வகையில், தீப்பெட்டி கணேசன் சிரமப்படுவதை பிக்பாஸ் பிரபலம் சினேகன் கேள்விப்பட்டுள்ளார். உடனடியாக அவரை நேரில் சந்தித்து சினேகன் அறக்கட்டளை சார்பில் 2 வாரங்களுக்கு குடும்பம் நடத்துவதற்கு தேவையான பொருட்களை வழங்கியுள்ளார். அவருடைய குழந்தைகளின் இந்த வருட கல்வி செலவை தானே ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து தீப்பெட்டி கணேசன் வெளியிட்ட வீடியோவில், "இந்த ஊரடங்கு உத்தரவை நாள் எங்கள் அன்றாட தொழிலில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் தினசரி வாழ்க்கையில் நடத்துவதற்கு இயலாத சூழல் ஏற்பட்டது. இதனை அறிந்து கொண்டு நடிகர் பிரேம் குமார் எனக்கு உதவி செய்தார். அவர் பூச்சி முருகனிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது நடிகர் விஷால், சினேகன் மற்றும் பல நடிகர்கள் எனக்கு தேவையான பொருட்களை வீட்டிற்கு வந்து வழங்கி உதவி செய்தனர். நடிகர் ஸ்ரீமன், எந்த உதவி வேண்டுமென்றாலும் என்னை தொலைபேசியில் அழையுங்கள் என்று தன் உதவி கரத்தை நீட்டியுள்ளார்.

இவர்கள் அனைவரும் செய்த உதவியை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். என்னுடைய இந்த நிலையை நடிகர் அஜித் அறிந்தாள் நிச்சயமாக உதவி செய்வார். அவர் மிகவும் நல்லவர்." என்று தீப்பெட்டி கணேசன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

நடிகர் லாரன்ஸ் தீப்பெட்டி கணேசனின் சிரமத்தை நடிகர் அஜித்திடம் கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவிஞர் சினேகன் செய்த உதவியை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.