திடீரென ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரபல தென்னாபிரிக்கா ஆல் ரவுண்டர்!

தென்னாபிரிக்கா அணியின் ஆல் ரவுண்டர் டுமினி உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


தென்னாபிரிக்கா அணியின் ஆல் ரவுண்டர் டுமினி முதல் முறையாக அந்த அணிக்காக ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற டுமினி தற்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 தென்னாபிரிக்கா அணிக்காக இவர் 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 34 வயதான டுமினி இதுவரை 193  ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரு நாள் போட்டியில் தனது ஓய்வை பற்றி அறிவித்த இவர் சர்வதேச T20 போட்டிகளில் தென்னாபிரிக்கா அணிக்காக தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

நீண்ட காலம் இதை பற்றி யோசித்து தான் இந்த முடிவை எடுத்ததாக இவர் கூறியுள்ளார். மேலும் இவர் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். தென்னாபிரிக்கா அணியின் மேட்ச் பினிஷெராக பல போட்டிகளில் இவர் விளங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் ஐபிஎல் மற்றும் உள்ளூர் T20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட போவதாகவும் கூறியுள்ளார்.