திருமணம்! விவாகரத்து! 2 குழந்தைகள்.! மீண்டும் காதல்! தகாத உறவு! சீனியர் சினிமா பிரபலம் சொன்ன சீக்ரெட்!

என்னைப் பற்றி வதந்திகளை பரப்புவதற்கு சிலர் தனியாக வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளதாக பிரபல பாடகி கூறியுள்ளார்.


தெலுங்கு திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் சுனிதா ஆவார். ஏராளமான திரைப்பட பாடல்களை பாடி பிரபல பின்னணி பாடகியாக வலம் வரும் சுனிதா பாடுவது மட்டுமல்லாமல் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிகையாகவும் விளங்கி வருகிறார். தனது 19வது வயதிலேயே திருமணம் செய்து கொண்ட சுனிதாவுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் முறைப்படி விவாகரத்து செய்து கொண்டனர். இவரது மகள் ஸ்ரேயாவும் தற்போது பாடகியாக வலம் வருகிறார்.

வழக்கமாகவே பாடகி சுனிதாவை பற்றி திரையுலகில் வதந்திகள் வந்து கொண்டே இருக்கும். அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர் ஒருவரை காதலிப்பதாகவும் அடிக்கடி வதந்திகள் வந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் பாடகி சுனிதா சமீபத்தில் ஃபேஸ்புக்கில் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி உருக்கமான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் என்னைப் பற்றி எந்த காரணமும் இல்லாமல் என்னை குறிவைத்து பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். என்னைப்பற்றி வதந்திகள் பரப்புவதற்காக மட்டுமே வாட்ஸ்அப் குரூப்கள் தொடங்கப்பட்டு இருப்பதையும் நான் பார்த்துள்ளேன்.

என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சில பெண்களும் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ஆணாதிக்கம் மிகுந்த இந்த சமூகத்தில் ஒரு தனிப்பெண்ணாக குழந்தைகளை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்று நான் பார்த்து இருக்கிறேன். இது போன்ற விஷயங்கள் என்னையும் என் குடும்பத்தையும் பாதித்து விடாமல் இருக்க எனது ரசிகர்கள் என் பணியை ரசித்து நினைவூட்டிய படி இருக்கின்றனர் எனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.