ராஜா ராணி செம்பாவுக்கு கொரோனா பூகம்பத்துக்கு இடையே பிறந்த குழந்தை! முதல் முறையாக வெளியான புகைப்படம் உள்ளே!

முதன்முதலாக தங்களுக்கு பிறந்த குழந்தையின் புகைப்படத்தை பிரபல சீரியல் ஜோடி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.


பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்னர் வரை "ராஜா ராணி" என்ற சீரியல் இடம்பெற்றிருந்தது‌. இந்த சீரியலில் "கார்த்திக்" மற்றும் "செண்பா" கதாபாத்திரமானது பொதுமக்கள் விரைவில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அமைந்திருந்தது.

கார்த்திக்கின் இயற்பெயர் சஞ்சீவ் மற்றும் செண்பாவின் இயற்பெயர் ஆலியா மானசா என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இருவரும் மிகவும் நெருக்கமாகி காதலிக்க தொடங்கினர். இருவரின் வீடுகளிலும் இந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.

ஆனால் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் அழகான புகைப்படங்களை சஞ்சீவ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பல மாதங்களுக்கு முன்னர் பதிவேற்றம் செய்திருந்தார். இதனிடையே சில மாதங்களுக்கு முன் ஆலியா கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தையும் சஞ்சீவ் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆலியாவுக்கு அழகான குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியானது சமூக வலைத்தளங்களில் வெளியானது. தற்போது சஞ்சய் என்னுடைய குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.