சீரியல் நடிகையுடன் தகாத உறவு புகார்..! மகன் புகைப்படத்தை வெளியிட்டு நசீம் கொடுத்த பதிலடி!

பிரபல சீரியல் நடிகர் மகனுடன் வெளியிட்ட புகைப்படமானது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல தனியார் தொலைக்காட்சியின் "பகல்நிலவு" என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் அஸீம். இவரின் நடிப்பு அழகு இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

இதனிடையே அதே சீரியலில் நடித்து வந்த பெண்ணுக்கும் இவருக்கும் தொடர்பிருப்பதாக கிசுகிசுக்கள் ஏற்பட தொடங்கின. இதனால் அஸீமின் மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 

தற்போது அஸீம் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். "என்னுடைய உலகத்தை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறேன்" என்றும் புகைப்படத்திற்கு கீழே பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.