பிரபல இளம் நடிகையுடன் தகாத உறவு..! மனைவியை விவாகரத்து செய்யும் பகல் நிலவு நாயகன்!

பிரபல சீரியல் நடிகர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சீரியல் நடிகையை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


விஜய் டிவியில் வெளிவந்த பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல் தொடர்களில் கதாநாயகனாக நடித்திருந்தவர் அஸீம். இவருக்கு ஏற்கனவே சோயா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே இவருக்கும் பள்ளிப்படிப்பை முடித்துள்ள சீரியல் நடிகை ஒருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் இணைந்து "சிறந்த ஜோடி" முதலிய விருதுகளை தட்டி சென்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இதனிடையே நடிகர் அஸீம் தற்போது தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சீரியல்நடிகை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த செய்திகளை அஸீம் திட்டவட்டமாக மறுத்திருப்பினும், அவருடைய மனைவி விவாகரத்தில் வாழ்க்கை தொங்கிக் கொண்டிருப்பதாக அழுது புலம்பியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.