அழகு முக்கியம் அல்ல..! காதலுக்கு மரியாதை செய்த பிரபல சீரியல் நடிகை..! ஊரடங்கில் அவசர கல்யாணம்..! யார் தெரியுமா?

கொரோனா ஊரடங்கு காலத்தில் பிரபல மலையாள சின்னத்திரை நடிகை திருமணம் செய்துள்ள செய்தியானது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் கொரோனா வைரஸுக்கு எதிராக நாடு முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு வந்தன‌. ஊரடங்கு காலத்தில் எந்தவித சினிமா மற்றும் சின்னத்திரை சார்ந்த படப்பிடிப்புகள் அல்லது நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனிடையே சின்ன சின்ன பணியாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் அண்மையில் 25 பணியாளர்களுடன் சேர்த்து சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள பல்வேறு  நிபந்தனைகளுடன் அரசு அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்த தல பிரபலங்கள் சமூக விலகலை கடைபிடித்து திருமணம் செய்து வருகின்றனர்.

மலையாள சின்னத்திரை உலகில் "செம்பட்டு" சின்னத்திரை தொடர் மூலம் அறிமுகமானவர் சுவாதி நித்யானந்த். இவர் "பாராமணம்" என்று வெற்றிகரமான சின்னத்திரை தொடர் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கும் "பாராமணம்" சின்னத்திரை தொடரின் ஒளிப்பதிவாளரான பிரதீஷ் என்பவருக்கும் சென்ற மாதம் 30-ஆம் தேதியன்று திருமணம் என நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமூக விலகலை கடைபிடித்து கேரளாவில் இருவீட்டு பெரியோர் முன்னிலையிலும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் குறித்த புகைப்படங்களா சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

இந்த செய்தியானது கேரளா மாநிலத்தில் வைரலாகி வருகிறது.