அந்த விஷயம் எப்பவுமே ஸ்பெஷல் தான்..! அம்மா ஆகப் போகும் ராஜா ராணி செம்பா வெளியிட்ட சீக்ரெட்!

பிரபல சீரியல் நடிகையான ஆலியா மானசா கர்ப்பமாக இருக்கும் தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சின்னத்திரை தொடர்களில் நடித்து சமீப காலங்களில் மிகவும் பிரபலமான ஜோடி ஆலியா மானசா - சஞ்சீவ். விஜய் டிவியில் வெளிவந்த "ராஜா ராணி" மெகா தொடரின் மூலம் இவர்கள் உலகம் முழுவதிலும் பிரபலமடைந்தனர்.

தற்போது ஆலியா மானசா விஜய் டிவியில் ஞாயிறு தோறும் வெளிவரும் "டான்சிங் சூப்பர்ஸ்டார்" தொடரில் நடனமாடி வருகிறார். நேற்று நடந்த நிகழ்ச்சியின் போது ஜட்ஜ் திவ்யதர்ஷினி, ஆலியா மானசாவை நோக்கி "உங்கள் அம்மாவை எவ்வளவு செய்கிறீர்கள்" என்று கேட்டுள்ளார்.

அதற்கு ஆலியா மானசா " 23 வயது வரை என் வாழ்க்கையில் அம்மா எவ்வளவு முக்கியமான பங்கு வகித்தார் என்பதை நான் அறியவில்லை. ஆனால் தற்போது கர்ப்பமாக இருக்கும் காலத்தில் அம்மாவின் அருமை பெரிய அளவிற்கு எனக்கு புரிகிறது." என்று கண்ணீர் மல்க கூறினார். 

மேலும் "எனக்கு நடிப்பு மிகவும் பிடிக்கும். நடிப்பின் மூலம் நான் மிகவும் பிரபலம் அடைந்துள்ளேன். என்னுடைய பெற்றோரின் நண்பர்கள் கூட உங்களுடைய மகளுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்றனர்" என்றும் கூறினார்

நடனத்தின் மீது ஆலியா மானசாவிற்கு மிகப்பெரிய ஆர்வம். தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் மூலமாக சென்னை முகப்பேரில் 3 நடன பள்ளிகளை இயக்கி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் ராஜா ராணி மெகா தொடரில் நடித்து வந்தபோது நடிகர் சஞ்சீவுடன் காதல் கொண்டார். ஆனால் இவர்களுடைய திருமணத்தை ஆலியாவின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஆல்யா தற்போது கர்ப்பமாகவுள்ளார். தற்போதாவது ஆலியாவின் பெற்றோர் மனம் மாறி அவருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கருதுகின்றனர்.