இணைந்த இருமலர்கள் ஆலியா அம்மா ஆகப்போறாங்க..! காரணம் யார் தெரியுமா?

பிரபல பாலிவுட் சீரியல் நடிகை திருமணமான 4 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பமாகியிருக்கும் செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் தொலைக்காட்சிகளில் "கும்கும் பாக்யா" என்று சீரியல் தொடர் வெளியானது. இந்த தொடர் தற்போது வரை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெளியாகி வருகிறது. இதனை தனியார் தொலைக்காட்சி ஒன்று தமிழில் "உள்ளம் கொள்ளை போகுதடா" என்ற பெயரில் வெளியிட்டனர்.

இந்த சீரியல் அனைவரிடமும் இருந்து மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஷீக்ஷா சிங் தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் 2016-ஆம் ஆண்டு கரன் சிங் என்ற விமான ஓட்டுநரை திருமணம் செய்து கொண்டார். இவர் சமீபத்தில் வெளியிட்ட செய்தியில் தான் தான் கர்ப்பமாக இருப்பதை கூறியுள்ளார்.

அந்த பதிவில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், ஜூன் மாதத்தில் தனக்கு குழந்தை பிறப்பதற்கு மிக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். முன்னதாகவே தயாரிப்பு நிறுவனத்திடம் தான் ஏப்ரல் மாதத்திலிருந்து படப்பிடிப்பிலிருந்து சற்று ஓய்வு பெறப்போவதாக கூறியிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்திலிருந்தே ஓய்வு பெற்று வருவதாக கூறினார்.

மேலும் தன்னுடைய கணவரும் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே வசித்து வருவதாகவும் கூறினார். தன்னுடைய கணவர் தனக்கு ரோபோவை போன்ற ஒரு கருவியை வாங்கி தந்திருப்பதாகவும், அது வீட்டை முழுவதுமாக பெருக்கி துடைத்து விடுவதாகவும் கூறுகிறார். மேலும் ஷீக்ஷா தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும், செல்ல பிராணிக்கும் சமைத்து வருவதாகவும் கூறினார்.

தன்னுடைய பிரசவகாலத்தில் தாயார் மற்றும் சகோதரி தன்னுடன் இருக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதற்கு தற்போது வழியில்லை என்றும் வேதனைப்பட்டார். வீட்டிற்கு அருகில் மருத்துவமனை உள்ளதாகவும் மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் பிரசவ காலத்தை எவ்வாறு கழிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருவதாகவும் கூறினார். இந்த செய்தியை கேட்ட அவருடைய ரசிகர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.

இந்த செய்தியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.