பிரபல தெலுங்க சின்னத்திரை நடிகையான ராகா மாதுரியை அவருடைய சிகை அலங்கார நிபுணரான ஜோதிகா என்பவர் தாக்கியுள்ளது சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீரியல் நடிகைக்கு படப்பிடிப்பு தளத்தில் அடி உதை! ஜோதிகாவை போலீஸ் தேடுகிறது!
தெலுங்கு சின்னத்திரை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ராதா மாதுரி. இவர் ஜோதி என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். எளிமையான தோற்றத்தினால் பொது மக்கள் அனைவரிடமும் எளிதில் தன்மேல் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தி கொண்டார்.
இந்நிலையில் 16-ஆம் தேதியன்று ராகா மாதுரி படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது தன்னுடைய விலைமதிப்புமிக்க ஆபரணத்தை காணாமல் தேடியுள்ளார். நீண்ட நேரம் தேடிய பிறகும் கிடைக்காத காரணத்தினால், பஞ்சாரா ஹில்ஸ் பகுதி காவல் நிலையத்தில் தன் சிகை வடிவமைப்பாளர் மீது சந்தேகம் உள்ளதாக புகார் அளித்துள்ளார்.
காவலர்கள் நன்கு தேடியதில் அந்த ஆபரனமானது நடிகையுடைய காரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மாதுரியின் சிகை வடிவமைப்பாளரான ஜோதிகா என்ற பெண் பெரிதும் மனமுடைந்தார். இன்று படப்பிடிப்பின்போது அவர் ராகா மாதுரியை கண்டவுடன் ஆத்திரமடைந்து அவரை தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலினால் சிறிது நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு அந்த படப்பிடிப்பு தளம் மிகவும் பரபரப்பாக இருந்தது. பின்னர் அங்கிருந்தோர் ஜோதிகாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பிரபல சீரியல் நடிகையை அவருடைய சிகை வடிவமைப்பாளரே தாக்கியுள்ள சம்பவமானது, படப்பிடிப்புத் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!
பிறகு ராக மாதுரி காவல் நிலையம் சென்று ஜோதிகா மீது புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஜோதிகாவை போலீசார் தேடி வருகின்றனர்.