பட்டப்பகல்! மகள் கண் முன்பு! உதயநிதி ரசிகர்மன்ற நிர்வாகி தலையை துண்டாக வெட்டி போலீஸ் ஸ்டேசன் எடுத்துச் சென்ற 3 பேர்! திருச்சி திகுதிகு!

முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவமானது திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் ஒரு மிகப்பெரிய ரவுடி. இவர் ஸ்ரீரங்கம் பகுதியில் வலம்வரும் முக்கிய ரவுடிகளின் ஒருவராவார். இவருடைய வயது 39. இவர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவர் மீது கொலை, கற்பழிப்பு என பல்வேறு பிரிவுகளில் 33 வழக்குகள் உள்ளன. 

பல வருடங்களுக்கு முன்னர் இவர் முன்விரோதம் காரணமாக பால்காரர் ஒருவரை வெட்டினார். மேலும் அவருடைய தலையை கையோடு காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்றார்‌. அதன்பின்னர் அவர் தலைவெட்டி சந்திரமோகன் என்றும் அழைக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் அவருக்கு நிறைய முன்விரோதம்களும் ஏற்பட்டன.

நேற்று தேவிபாலா தியேட்டரிலிருந்து ரயில்வே சுரங்கம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரை மடக்கிப்பிடித்து பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முற்பட்டனர். தனக்கு ஆபத்து உள்ளது உணர்ந்தவர் உடனடியாக தப்பி ஓட முயற்சி செய்தார்.

ஆனால் மர்ம நபர்கள் அவரை மடக்கிப்பிடித்து தங்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களால் சந்திரமோகனை தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவருடைய தலையை கொய்த்தெடுத்து மர்ம நபர்கள் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தனர்.

முன்விரோதம் காரணமாக மட்டுமே சந்திரமோகன் கொலை செய்ததாக காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.