தொடையில் கை வைத்து அழுத்தினார்..! தகாத முறையில் நடந்து கொண்டார்..! பிரிட்டன் பிரதமர் மீது பகீர் புகார்!

பிரிட்டன் பிரதமர் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்திருப்பது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரெக்ஸிட்டிலிருந்து வெற்றிகரமான முறையில் பிரிட்டன் நாட்டினால் வெளிவரவில்லை. இதற்காக அப்போதைய பிரதமரான தெரசா மே எவ்வளவோ முயன்று பார்த்தார். ஆனால் அவரால் இயலவில்லை. இதற்காக தானே பொறுப்பேற்று தெரசா மே பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

உடனடியாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியான போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். பதவியேற்ற உடனே பிரிக்ஸிட் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்ப்பதற்காக நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் என்று எலிசபெத் ராணியிடம் அனுமதி கோரியிருந்தார். இதனை அந்நாட்டு உச்சநீதிமன்றம், சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி கடுமையாக கண்டித்தது.

இவ்வளவு பெரிய சிக்கலில் இருக்கும் போரிஸ் ஜான்சனுக்கு, தற்போது மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரபல பத்திரிக்கையில் பத்திரிக்கையாளராக பணியாற்றிவரும் சார்லட் எட்வர்ட்ஸ் என்ற பெண் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

1999-ஆம் ஆண்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்று தன் தொடை மீது கைவைத்து தகாத செயல்களில் ஈடுபட்டார் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் இதற்கு போரிஸ் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். "தன்னுடைய புகழை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கேவலமான பொய்கள் பரவி வருகின்றன" என்று கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் எட்வர்ட்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நடந்த சம்பவத்தை மறந்திருந்தால் பிரதமருக்கு நான் நினைவூட்ட ஆசைப்படுகிறேன்" என்று கூறினார்.

இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.