நுரையீரலுக்குள் கொரோனா வைரஸ் எப்படி நுழைகிறது தெரியுமா? நுழைந்த பின் நடப்பது என்ன?

கொரோனா வைரஸால் நுரையீரல் எவ்வாறு பாதிப்படைகிறது என்ற வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 29,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 6,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

சளி, இருமல் ஆகியன மட்டுமே நோய்க்கான அறிகுறி என்று பலரும் தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் வைரஸ் தாக்குதலினால் நுரையீரல் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதனை அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்ந்த டாக்டர் கீத் மோர்ட்மேன் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவானது வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை கொண்டு அவர் விளக்கியுள்ளார். மேலும், வீடியோவின் தொடக்கத்தில் பாதிக்கப்படாத உயர் ரத்த அழுத்தம் கொண்ட 59 வயது முதியவர் ஒருவரின் நுரையீரலை காட்டுகிறார். அதன் பின்னர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நுரையீரலை அவர் காட்டுகின்றார். 

வீடியோவில் மஞ்சள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவையாக கூறுகிறார். மேலும் இந்த நோய் தாக்குதல் அனைத்து வயது நபர்களையும் தாக்கும் வல்லமை படைத்தது என்றும் கூறியுள்ளார். எவ்வளவு எளிதாக நுரையீரலை வெகுவாக பாதித்து சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதனை இந்த வீடியோவின் மூலம் மோர்ட்மேன் தெளிவாக கூறியுள்ளார். 

இந்த வீடியோவை பார்த்தாவது உலக மக்கள் அனைவரும் இந்த நோய் தாக்கத்தை புரிந்துகொண்டு சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.