நான் கடவுள் படத்திற்கு வாங்கிய அட்வான்ஸ்..! திருப்பித்தர மறுத்த அஜித்திற்கு டைரக்டர் பாலா அடி உதை? நடந்தது என்ன?

நான் கடவுள் திரைப்படத்தின் போது இயக்குனர் பாலா மற்றும் நடிகர் அஜித்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து பிரபல தயாரிப்பாளர் P.L. தேனப்பன் விளக்கமளித்துள்ளார்.


கடந்த 2009ம் ஆண்டு இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஆர்யாவின் நடிப்பில் நான் கடவுள் திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் முன்னதாக ஆர்யாவுக்கு பதிலாக நடிகர் அஜீத் நடிக்கவிருந்தார். ஆனால் இயக்குனர் பாலாவிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக நடிகர் அஜித் இந்த படத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அஜித்துக்கும் பாலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த வாக்குவாதத்தில் இயக்குனர் பாலா நடிகர் அஜித்தை தாக்கியதாகவும் செய்திகள் உலா வந்தன. 

ஆனால் சமீபத்திய தகவலின்படி, நடிகர் அஜித் நான் கடவுள் திரைப்படத்தில் இருந்து வெளியேற முடிவு செய்ததால், வாங்கிய அட்வான்ஸ் பணத்தை வட்டியுடன் திரும்ப கொடுக்கக் கோரி இயக்குனர் பாலா நடிகர் அஜித்திடம் கேட்டுள்ளார். ஆனால் அஜித் இதற்கு மறுத்துள்ளார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் சூடு பிடித்ததால் முடிவில் நடிகர் அஜித் வட்டியுடன் முன் பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.   

 இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் P.L தேனப்பன் அவர்கள் நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் பாலாவுக்கு இடையே நான் கடவுள் திரைப்படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை பற்றி விளக்கம் அளித்துள்ளார். இந்தப் பிரச்சனையில் அஜித்துக்கும் இயக்குநர் பாலாவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததே தவிர அஜித்திடம் இயக்குனர் பாலா எந்த வன்முறையையும் கையாளவில்லை என கூறினார். 

தயாரிப்பாளர் தேனப்பன் அவர்களின் இந்த பேட்டியின் மூலம் நடிகர் அஜித்தை இயக்குனர் பாலா தாக்கினார் என்று வெளியான செய்தி வதந்தி என்று தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.