கவின் உண்மையாகவே காதலிக்கும் பெண் ஒருவர் இருக்கிறார்! பிரபல தயாரிப்பாளர் கொளுத்திப் போட்ட அதிர்வேட்டு!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது .


இந்த நிகழ்ச்சியானது இத்தகைய விறுவிறுப்பை பெறுவதற்கு காரணமாக இருப்பதே கவின் மற்றும் சாக்ஷி ஆகிய இருவருக்கும் இடையில் நடைபெறும் தகராறு தான்.

"நட்புன்னா என்னன்னு தெரியுமா" என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரவீந்திரன், சமீபத்தில் அளித்த பேட்டியில் கவினை  பற்றியும் கவினுடைய காதலைப் பற்றியும் சுவாரஸ்யமான தகவலை கூறினார்.

இந்த திரைப்படத்தில் கவின்  ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . அப்போது கவின் உடன்  ரவீந்திரனுக்கு நல்ல ஒரு நட்பு ஏற்பட்டிருக்கிறது . இதனால் கவின் பற்றி  தனக்கு நன்றாக தெரியும் என்று ரவீந்திரன் கூறியுள்ளார்.  

அப்போது பேசிய அவர் கவினுக்கு வெளியில் ஒரு பெண்ணுடன் காதல் இருப்பதாகவும், அவரை தான் கவின்  திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறினார்.

இருப்பினும் கவின் எந்த பெண்ணை காதலிக்கிறார் என்று கூற மறுத்துவிட்டார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.