லண்டனுக்கு படிக்கச் சென்ற பாஜக தலைவரின் மகன் மாயம்! கடற்கரையில் ஒதுங்கிய முக்கிய பொருள்! பீதியில் உறவினர்கள்!

பிரபல அரசியல்வாதியின் மகன் லண்டனில் காணாமல் போன சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் உதய் பிரதீப். இவர் பாஜக கட்சியின்‌ தலைவராக உள்ளார். இவருடைய மகனின் பெயர் உஜ்வால் ஸ்ரீவர்ஷா. இவருடைய வயது 23. இவர் தெலுங்கானாவில் பொறியியல் படித்தார். மேல்படிப்பிற்காக லண்டன் சென்றார். உஜ்வால் தினமும் தன் பெற்றோருடன் பேசுவதை வழக்கமாக கொண்டவர்.

ஆனால் இறுதியாக 21-ஆம் தேதியன்று பேசியிருந்தார். அதன் பிறகு அவர் தன்னுடைய பெற்றோரை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் பயந்து போன பிரதீப் தன் மகனை காணவில்லை என்று லண்டன் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இதனிடையே உஜ்வாலின் பை மட்டும் கடற்கரை அருகே கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உஜ்வாலின் பெற்றோர் கடுமையாக மன உளைச்சல் அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உதவி செய்வதாக உறுதியளித்தார். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.