ஒரே மாதத்தில் 30 கிலோ எடை குறைந்தது..! என்ன ஆனது கேப்டன் மகன்களுக்கு? அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள்!

புகழ்பெற்ற நடிகரின் மகன் 30 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்டைலாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


கோலிவுட் திரையுலகில் புகழ்பெற்ற நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைவருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன். விஜயகாந்த் அவர்கள் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த போது கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு இணையாக ஜெபித்து வந்தார்.

பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கிய பிறகு, சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிவிட்டார். தீவிர அரசியலில் ஜொலித்து வந்த அவர் உடல் நலம் குன்றியதால் முழு நேரம் ஈடுபட இயலவில்லை. இதனால் அவருடைய மனைவியான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகியோர் கட்சியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.

இதனிடையே விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன் சினிமாவில் நடிக்க வந்தார். ஆனால் விஜயகாந்த் உருவாக்கிய பிம்பத்தை அவருடைய மகனால் உடனடியாக உருவாக்க இயலவில்லை. உடல் தோற்றம் கட்டுக்கோப்பாக இல்லாத காரணத்தினால் இவரால் சினிமாவில் உலா வர இயலவில்லை என்று கூறப்படுகிறது.

அதன்பின்னர் சென்று நாடாளுமன்ற தேர்தல்களில் பல்வேறு பேட்டிகளை அளித்து பல சர்ச்சைகளை உருவாக்கினார். சமீபத்தில் இவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. உடல் தோற்றத்தின் மீது அக்கறை செலுத்தியுள்ள விஜயபிரபாகரன், கிட்டத்தட்ட 30 கிலோ எடை குறைத்துள்ளார். அடையாளம் தெரியாத அளவிற்கு அழகாக மாறியுள்ள இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இவரது புகைப்படங்களை பார்த்து கட்சி தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகின்றனர்.