அலுவலக பெண் பணியாளருடன் பாலியல் உறவு! பெண் எம்பியின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்! அரசியல் பரபரப்பு!

அமெரிக்காவில் பிரபல அரசியல்வாதியான கேட்டி ஹில் பதவியை ராஜினாமா செய்திருக்கும் சம்பவமானது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் டெமாக்ரடிக் கட்சியின் கலிபோனியா மாகான வேட்பாளராக நின்று கேட்டி ஹில் நவம்பர் மாதம் 2018-ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருடன் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுப்பப்பட்டது.

இந்த புகாரை ஒழுங்கு நடவடிக்கை மன்றம் விசாரணை செய்தது. விசாரணையில் கேட்டி ஹில் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையானது என்று கூறி தீர்ப்பளித்தது. ஆனால் இதனை கேட்டி ஹில் முழுவதுமாக ஒப்புக்கொள்ளவில்லை. அதாவது, தான் தனிமையில் அந்த நபருடன் செலவழித்தது உண்மையென்றும், ஆனால் அதற்காக அவர் உடலுறவு கொண்டேன் என்று கூறப்படும் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

தற்போது அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்தவர்களின் பலம் குறைந்துவிட்டது. நவம்பர் 2020-ஆம் ஆண்டில் இவருடைய ராஜினாமாவை மூலம் ரிபப்ளிக் கட்சியின் பலம் மீண்டும் உயரலாம் என்று பன்னாட்டு அரசியல் வல்லுநர்களால் கருதப்படுகிறது.

இந்நிலையில் கேட்டி ஹில் விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.