காதல் ஆசை காட்டி இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய காங்கிரஸ் பிரமுகர்! பிறகு அரங்கேற்றிய விபரீதம்!

திருமண ஆசைகாட்டி காங்கிரஸ் கட்சி நிர்வாகி பெண்ணொருவரை கர்ப்பமாக்கிய சம்பவமானது வில்லியனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வில்லியனூர் அருகே சிவராந்தகம்பேட்டை என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்துவருகிறார். இவர் பி.ஏ பட்டதாரியாவார். மேலும் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கம் பின்னர் காதலாக மாறியுள்ளது. தமிழரசன் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். முதல்முறை உல்லாசம் அனுபவித்த போது அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்த தமிழரசன் கருவை கலைத்து விடுமாறு கூறிவிட்டார். அதே போல் அந்தப் பெண்ணும் கருவை கலைத்தார்.

மீண்டும் பலமுறை இருவரும் உல்லாசம் அனுபவித்தனர். இரண்டாவது முறையாக அந்த பெண் கருவுற்றார். இந்த முறையும் தமிழரசன் கருவை கலைத்து விடுமாறு  கூறியுள்ளார்.

ஆனால் அந்தப் பெண் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் இரு வீட்டாரும் அமர்ந்து பேசியதில், ஓரிரு வாரங்களில் திருமணம் செய்து வைப்பதாக தமிழரசன் தாயார் நம்பிக்கை அளித்தார். ஆனால் அந்தப் பெண்ணை மீண்டும் கருக்கலைக்க வற்புறுத்தி உள்ளனர். வற்புறுத்தலினால் அந்தப் பெண்ணும் கருவை கலைத்துள்ளார். 

கரு கலைந்த தகவல் தெரிந்த தமிழரசன் அந்தப் பெண்ணின் தொடர்பை விட்டுவிட்டார். திருமணத்திற்கும் தமிழரசனின் வீட்டார் மறுத்துவிட்டனர். இதனால் பயந்த பெண் வீட்டார்,வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த நிகழ்வுகளை கூறி புகார் அளித்தனர். 

காவல்துறையினர் தமிழரசன் அவரது தாயார் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவை கலைத்த மருத்துவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது வில்லியனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.