தம்பி மனைவியிடம் எல்லை மீறிய பாமக எக்ஸ் எம்எல்ஏ! போலீஸ் முன்னிலையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரொருவர் கூடப்பிறந்த சகோதரர் என்று கூட பாராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் என்னும் சட்டமன்ற தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த கண்ணன் என்பவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவருடைய தம்பியின் பெயர் மோகன். இருவருக்குமிடையேசமையல் எரிவாயு ஏஜென்சி நடத்துவதில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கண்ணனின் மனைவியின் சொந்தமான இடத்தில் மோகன் கேஸ் ஏஜென்சி நடத்த திட்டமிட்டிருந்தார். அந்த இடத்தை சுற்றி தடுப்புச் சுவர்களை கட்டியிருந்தார். இந்த செய்தி அறிந்த கண்ணன், தன் ஆட்களை வரவழைத்து தடுப்புச் சுவர்களை இடித்துள்ளார். மோகன் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த பயனுமில்லை.

காவல்துறையினர் அங்கு வந்த போதும் எதையும் கண்டுகொள்ளாமல் சுற்றி நின்றனர். பின்னர் ஏஜென்சிக்கு வரவழைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர் லாரியை சிறைபிடித்தார். ஆத்திரம் தீராத கண்ணன், மோகன் மற்றும் அவரது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். "அவன் இருந்தா தான நீ செய்வ" என்று தம்பி மனைவியை பொறுமையில் வஞ்சியுள்ளார்.

இந்த சம்பவங்களை காவல்துறையினர் வேடிக்கை பார்த்து வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.