வீட்டில் சடலமாக தொங்கிய லக்ஷ்மன் ஸ்ருதி உரிமையாளர்..! சென்னை பகீர்..!

புகழ்பெற்ற இசைக்குழுவின் உரிமையாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இயங்கி வரும் பிரபல இசைக்குழுக்களில் லக்ஷ்மன்ஸ்ருதி ஒன்று. இந்து இசைக்குழுவின் உரிமையாளர்களில் ஒருவர் ராமன்.இவருடைய இசைக்குழு உலகம் முழுவதும் புகழ்பெற்றதாகும். இந்நிலையில், நேற்றிரவு அசோக் நகரில் உள்ள தனது வீட்டில் ராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். உடனடியாக அசோக் நகர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராமனின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராமன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.