திருமணமாகி 7 ஆண்டுகள்..! ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி விவாகரத்தா? 2 பேரும் சேர்ந்து எடுத்த முடிவு இது தான்!

பிரபல இசையமைப்பாளரும், கதாநாயகருமான ஜிவி பிரகாஷ் விவாகரத்து பெற போவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களை தன்னுடைய இசைத்திறமையின் மூலம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இளைஞர்கள் மத்தியில் இவருக்கென ஒரு தனி இடம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவர் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் நடித்த "திரிஷா இல்லனா நயன்தாரா" திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பரவியது.

இவருடைய மனைவியின் பெயர் சைந்தவி. சமீப காலமாக இருவருக்குள்ளும் சுமூகமான உறவு இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக ஜிவி பிரகாஷ் நடிக்க வந்த பின்னர் இருவருக்குள்ளும் மனக்குமுறல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒருவழியாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தினர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த வதந்திகள் அனைத்து இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தின் கீழே, "ஆக சிறந்த பாதி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தையே ஜிவி பிரகாஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். 

இதன் மூலம் இருவருக்குள்ளும் எந்தவித தகராறும் இல்லை என்பதை அவர்கள் எடுத்துக்காட்டி இருப்பதாக, ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.