எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அது நடக்கலாம்..! புகைப்படத்துடன் நிறை மாத கர்ப்பிணி வெளியிட்ட தகவல்..!

பிரபல கதாநாயகி மற்றும் மாடல் அழகியான லிசா ஹேடன் 9 மாத கர்ப்பிணியாகயுள்ள புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.


"சே தில் ஹை முஷ்கில்" என்னும் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் லிசா ஹேடன் என்பவர் இந்திய திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் ஒரு மாடல் அழகியாக தன்னுடைய காலத்தை தொடங்கினார். இவர் டிணோ லால்வேணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஜாக் என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில், இவர் 2-வது முறையாக பிரசவித்தார். தன்னுடைய கர்ப்பகாலத்தின் பல்வேறு கட்டங்களில் புகைப்படங்களை வெளியிட்டார். மனிதனுடைய கர்ப்பத்தின் இறுதி கட்டத்தில் உள்ளார். இந்நிலையில் நேற்று சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்திற்கு கீழே "எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்பது போன்று பதிவு செய்திருந்தார்.

இந்த புகைப்படத்திற்கு பலரும் பல்லாயிரக்கணக்கான லைக்குகளை பதிவு செய்துள்ளனர். இவர் ஏற்கனவே "ஹவுஸ்ஃபுல் 3", "குயின்" ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் பலரும் அவருடைய கர்ப்ப காலத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணமுள்ளனர்.