தீராத நோய்..! உயிருக்கு போராடும் மகன்! அருகே படுத்து தந்தை செய்த செயல்! கண்களை கலங்க வைக்கும் சம்பவம்!

பிரபல மேஜிக் நிபுணர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய மகனின் அருகே அழுதுகொண்டிருப்பது போன்று வெளியாகியுள்ள புகைப்படங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.


கிரிஸ் ஏஞ்சல் என்பவர் அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற மேஜிக்கலை நிபுணர்கள் ஒருவராவார். இவருடைய மனைவியின் பெயர் பென்சன். இத்தம்பதியினருக்கு 5 வயதில் ஜாணி என்ற மகன் உள்ளான். 

பிறந்த 21 மாதங்களிலேயே உடல்நலத்தில் கோளாறு ஏற்பட்டது. அப்போது பரிசோதித்து பார்த்தபோது, ஜானி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக ஜானிக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜானி புற்றுநோயில் இருந்து முழுவதுமாக மீண்டு விட்டார் என்று கூறப்பட்டது. 

சென்ற மாதம் ஜானிக்கு மீண்டும் புற்றுநோய் பாதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அவனுடைய குடும்பத்தினர் மிகவும் பதித்துள்ளனர். ஜானியின் தந்தை அவனுடன் படுத்துக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே புகைப்படங்களை பகிர்ந்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

ஜானியின் தாயார் கூறுகையில், "அவனுக்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகம். நிச்சயமாக இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவான் என்ற நம்பிக்கையுள்ளது. அடுத்த வருடம் அவர்கள் பள்ளியில் சேர்ப்பதற்காக பள்ளிகளை தேடுவதற்கு பதிலாக மருத்துவமனைகளை தேடி வருகிறோம்" என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் காண்போர் இதயங்களை கரைக்கும் வகையில் அமைந்துள்ளன.