ஜான்சன் அன்ட் ஜான்சன் மருந்தால் விபரீதம்! பெண்களை போல் ஆணுக்கு வளர்ந்த மார்பகம்! அதிர்ந்த உறவினர்கள்!

மருந்தின் தவறான செயல்பாட்டினால் ஆணுக்கு பெண்களை போன்று மார்பகம் வளர்ந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் பிலடெல்பியா மாகாணம் அமைந்துள்ளது. இங்கு நிகோலஸ் முர்ரே என்ற 26 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் குழந்தையிலிருந்தே ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டார்.

நோயை குணப்படுத்துவதற்காக தனியார் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். 2003-2008 ஆகிய 6 ஆண்டுகளுக்கு அந்த மருத்துவர் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பான "ரிஸ்பெர்டால்" என்ற மருந்தை பரிந்துரைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நிக்கோலஸுக்கு பெண்களின் மார்பகங்கள் வளர தொடங்கியுள்ளன. இந்த மருந்தினால் ஏற்பட்ட விளைவு என்பதனை அறிந்து கொண்ட நிக்கோலஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் நிகோலஸ் தரப்பினருக்கு 1.75 மில்லியன் டாலர்கள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அப்போது அபராதத்தை குறைத்து 68,00,00 டாலர்களை வழங்கினால் போதும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் லாபத்திற்காக செயல்பட்டதாக கூறி நிகோலஸ் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த பிலடெல்பியா நீதிமன்றம் 8 மில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை அடுத்து ஜான்சன் ஜான்சன் மேல்முறையீடு செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட மருந்தாகவும் 1993-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு உரிமம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.