அசுர வேகம்! புளிய மரத்தில் மோதிய கார்! ஏர் பேக் வெளியே வந்தும் தொழில் அதிபருக்கு நேர்ந்த விபரீதம்!

அதிவேகமாக சென்ற கார் புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் பிரபல தொழிலதிபர் உயிரிழந்த சம்பவமானது திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்செந்தூர் பகுதியை சேர்ந்தவர் கிட்டப்பா. திருச்செந்தூரில் மிகப்பெரிய தொழிலதிபராவார். இவருக்கு சொந்தமாக திருச்செந்தூரில் அர்ச்சனா ஹோட்டல், உதயம் காபி பார், கிட்டு காபி பார் முதலிய நிறுவனங்கள் உள்ளன. இவர் இன்று அதிகாலை தன்னுடைய நண்பரும், திருச்செந்தூர் சாந்தி பேக்கரியின் உரிமையாளரான ராதாகிருஷ்ணன் என்பவருடன் காரில் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை கிட்டப்பாவே ஓட்டியுள்ளார். 

இதனிடையே முக்காணி என்னும் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக கார் சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்த புளிய மரத்தின் மீது வேகமாக மோதியது. கொடூரமான விபத்தானது இன்று அதிகாலை 3:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 

சம்பவ இடத்திலேயே தொழிலதிபர் கிட்டப்பா உயிரிழந்தார். ராதாகிருஷ்ணன் பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே உயிர் காப்பதற்காக காலில் பொருத்தப்பட்டிருந்த பலூன் விரிந்திருந்தும் கிட்டப்பா உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.