போலீஸ் அதிகாரியாக தாத்தா கக்கன் பெயரை காப்பாற்றிய பேத்தி ரஜேஸ்வரி ஐபிஎஸ்..! ஒரு நெகிழ வைக்கும் வெற்றிப் பயணம்!

மறைந்த முன்னாள் தமிழக அமைச்சரான கக்கன் அவர்களுடைய பேத்தி குடியரசு தினத்தன்று விருது பெறுகிறார்.


தமிழகத்தில் எளிமையான அரசியல்வாதி என்றவுடன் நம் நினைவிற்கு வரும் பெயர்கள் முதன்மையானவர் கக்கன் அவர்கள். நேர்மை, வாய்மை, எளிமை, தூய்மை அதுவே பண்புகளில் தமிழ்நாட்டில் இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியும் இவரைப்போன்ற அமையவில்லை என்றுதான் கூறவேண்டும்.

பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த இவரை அப்போதைய முதலமைச்சர் காமராஜர், "இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக" அழகு பார்த்தார். இவருக்கு மொத்தம் 6 பிள்ளைகள். 3-வது பிள்ளைகளை தவிர அனைவரும் ஆண்பிள்ளைகள். இவருடைய மகளின் பெயர் கஸ்தூரி சிவசாமி. 

இவருடைய 3-வது மகளின் பெயர் ராஜேஸ்வரி. ராஜேஸ்வரி ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று முதன் முறையாக மதுரையில் சிபிசிஐடி அதிகாரியாக பணியாற்றி வந்தார்.பின்னர் இவருடைய திறமைகளைப் பாராட்டும் வகையில், சிலை திருட்டு தடுப்பு பிரிவின் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.

இவர் பல்வேறு வீரதீர செயல்களை செய்துள்ளார். இவரின் செயல்களை பாராட்டி தமிழக அரசு இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது. குடியரசு தின விழாவின் போது ஜனாதிபதியின் கைகளால் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த சிறந்த காவல்துறையினர் விருது பெற்றுக்கொள்வர்.

அதுபோன்று, தமிழகத்தை சேர்ந்த 24 அதிகாரிகள் ஜனாதிபதியின் கைகளால் நேற்று விருது பெற்றனர். அவர்களில் கக்கனின் பேத்தியான ராஜேஸ்வரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய தாத்தாவின் வழியைப் பின்பற்றி ராஜேஸ்வரி செய்துள்ள சாதனைகளுக்கு அவருக்கு விருது கிடைத்துள்ளதாக அவருடைய சுற்றத்தை சேர்ந்த பலரும் மனம் நெகழ்கின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது.