நடிகை வரலட்சுமி சரத்குமார் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்தது அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் இரவு படுக்கைக்கு அழைத்தனர்.! நடிக்க வந்த சரத்குமார் மகளுக்கு ஏற்பட்ட அனுபவம்!
கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத கலை வாரிசு குடும்பங்களில் ஒன்று நடிகர் சரத்குமார் குடும்பம். இவருடைய மனைவியான ராதிகா சரத்குமார் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்து வருகிறார். சரத்குமாரின் முந்தைய மனைவிக்கு பிறந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் கோலிவுட் திரையுலகில் பிரபலம் அடைந்துள்ளார்.
கதாநாயகி, வில்லி, முக்கிய கதாபாத்திரம் ஆகிய அனைத்திலும் இவர் கனகச்சிதமாக செயல்பட்டு வருகிறார். இவருடைய நடிப்பு திறமையை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதனிடையே இவர் திரையுலகில் தான் சந்தித்து வந்த சிரமங்கள் குறித்து, சமீபத்தில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது "நான் பிரபல கலை வாரிசு என்றாலும், வாய்ப்புகள் கிடைப்பதற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர். அதற்கு ஒப்புக்கொள்ளாததால் நான் நிறைய படவாய்ப்புகளை கைவிட வேண்டியதாயிற்று. இருப்பினும் ஒழுக்கம் தவிர்த்து பட வாய்ப்புகளை பெற நான் விரும்பவில்லை. என்னிடம் தவறாக பேசிய சினிமா துறையை சேர்ந்தவர்களின் ஆடியோ ஆதாரம் உள்ளது. எல்லாம் முடிந்த பின்னர் குறைகூறும் பெண்களை நம்ப இயலாது" என்றும் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டானது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.